கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

கனவு மெய்ப்பட வேண்டும்



















நடந்து செல்ல செல்ல
எனது தூரம் வளர்கிறது
பாதை ஏனோ முடியவில்லை !
அருகில் எவரையும்
காண முடியவில்லை !
தேநீர் அருந்த எவ்வளவு
தூரம் பயணிப்பது?
ஒரு ஓலைக் குடிலுக்கு அருகில்
எனது தாய் என்னை வரவேற்கிறாள்!
மகனே...கால் வலிக்கிறதா?
உள்ளே வா ..... உனக்கு தேநீர் தருகிறேன்
என்றழைத்து ஒரு கோப்பை தேநீர்
அருந்தத் தருகிறாள்!
என் கரங்களைப் பற்றி
அவள் கண்ணீர் மல்க கூறுகிறாள்
" தடைக் கற்கள் என்றுமே
உனது படிக் கற்கள் தான்!
சோர்வு அடையாதே.....
என்றாவது இந்த உலகம்
உன்னை திரும்பி பார்க்கும்"
இந்த உற்சாக வார்த்தைகள்
என்னுள் ஆனந்த ராகங்களை
மீட்டுகிறது......
எனக்கு புதியதாய் சிறகுகள்
முளைக்கின்றன......
இதோ ....நான் பறந்து செல்கிறேன்...
இப்போது நான் பயணிக்கும் தூரம்
அதிகமில்லை!
இலக்குகள் என்னருகே.........!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

4 கருத்துகள்:

  1. நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகள்..

    பதிலளிநீக்கு
  2. //" தடைக் கற்கள் என்றுமே
    உனது படிக் கற்கள் தான்!
    சோர்வு அடையாதே.....
    என்றாவது இந்த உலகம்
    உன்னை திரும்பி பார்க்கும்"//

    உங்களது இவ் உற்சாக வார்த்தைகள் என்னையும் கூட ஆனந்தராகங்களை அள்ளித் தருகிறது.அருமை சகோதரா.

    பதிலளிநீக்கு
  3. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
    இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு