இசையுலகின் இணையிலா மேதை !
இறைவனின் இசை அவதாரம் !
இயற்கையின் இதயத்தை தொட்டவன் !
இயல்பின் வெளிப்பாடுகளில்
இமயத்தை முத்தமிட்டவன் !
இலங்கும் புவிமீது இசையின்
இலக்கணத்தை வடித்தவன் !
இன்றல்ல நேற்றல்ல என்றும்
இசையுலகின் சக்கரவர்த்தி !
இளையராஜா- எங்களின்
இதயம்கவர் கள்வன் !
இந்தியத்தாய் பெற்றெடுத்த
இணையிலா தவப்புதல்வன்
இன்னும் இன்னும் வேண்டும்
இவனின் இசை கேட்டு
இன்பம் பருகும் வாழ்நாட்கள் !
இந்த இன்னிசை வேந்தனின்
இனிய பிறந்தநாளில் வாழ்த்துவோம்
இதயம் கனிந்து !
............கா.ந.கல்யாணசுந்தரம்.
இளையராஜா பற்றி கவிதை அருமை. அவசியம் kavithaigal0510.blogspot.com-தளத்திற்கு வந்து கருத்தினை வழங்க கோருகிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி தங்களுக்கு.
பதிலளிநீக்கு