கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

அம்மா எனும் சொல் அற்புதமானது ...


வணிகக்கல்வி வாழ்வினை உயர்த்தும்
கல்வியில் வணிகம் மனிதத்தை வீழ்த்தும்
தாய்மொழிக் கல்வி தரத்தினை பெருக்கும்
அயல்மொழி கற்றிட அடித்தளம் அமைக்கும்

செம்மொழி தமிழின் இலக்கிய மாண்பு
சிந்தனை வளத்தின் இயற்கை ஊற்று
புலமை பெற்றிட்ட முன்னோரெல்லாம்
பன்மொழி பயின்று மேதைகளானார்

ஆங்கிலம் பயிலும் அரும்புகளிடத்து
அம்மா எனும் சொல் அற்புதமானது
அளவுக்கு மீறிய புத்தக சுமையில்
அமுத மொழியோ புதைந்து போனது

உலகின் தொன்மை தமிழில் உண்டு
உண்மை இதுவென அனைவரும் அறிவர்
பெற்றோர் நாளும் தமிழினை பகன்றால்
புதிய தலைமுறை அணியும் மகுடம்

.................கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், மார்ச் 02, 2009

நினைவலைகள்









வீட்டின் சன்னல் கதவுகளை
திறந்து வைத்து பார்க்கிறேன்...
மென்மையான வீசிக்கொண்டே இருக்கிறது!
தென்றலுக்குள் பொதின்திருக்கும்
நினைவலைகளில் என்னை நானே மறக்கிறேன்!
அப்போதுதான் மழை பெய்த ஈரம்,
வீட்டின் பரண் மீது இருந்த பழைய
அகல் விளக்குகளை தேடி எடுக்கிறேன்
மணல் மீது அகல்களால் இட்டிலிகளை
சுட்டு எடுக்கிறேன்...ஆம் அவை மணல் இட்டிலிகள்!
நண்பர்களை அழைக்கிறேன்....
வாருங்கள் சூடான இட்டிலிகள் சாப்பிடலாம்!
அவர்களும் மணல் இட்டிலிகளை சாப்பிடுவதுபோல்
பாவனை செய்தார்கள் ...ஆம்
கால நீரோட்டத்தில் மறைந்த என் அன்னையின்
நினைவலைகளில் மிதக்கிறேன்!
அம்மா இருந்தவரை எனக்கு தெரியவில்லை
பசியும் பட்டினியும்!







.............கா . ந. கல்யாணசுந்தரம்.