கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், டிசம்பர் 19, 2011

வாழ்க்கைப் படகு!பயணங்களில் எப்போதுமே
வெற்றி நிச்சயம் என்று
சொல்லமுடியாது!
இதுதான் இலக்கு என்று
பயணிப்பவர்களுக்கு கூட
படிக்கற்கள் தடைக்கல்லாய்
மாறியதுண்டு!
விட்டுக்கொடுக்கும்
பண்பானவர்களும்
வீதியில் நிற்கும் அவலங்கள்
அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது!
ஒரு நாணயத்தின்
இருபக்கங்களாய் மானுடம்
இந்த கலியுகத்தில்
வெற்றித் தோல்விக்கு மத்தியில்
பந்தாடப்படுகிறது!
ஓ.....மறைந்துபோகும் மானிடனே
மறந்துவிடாதே.....!
இந்த பிறவிக்கடலில்
எப்போதாவது சந்திக்கும்
வாழ்க்கைப் படகின்
வெற்றிப் பயணத்தில்
உன்னுடன் பயணிக்கின்றன...
தோல்வியின் துடுப்புகளும்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

3 கருத்துகள்:

 1. அசத்தல் வரிகள்..'
  வெற்றியை நோக்கி பயணம் செய்யும்
  வாழ்வில் எதுவும் நேரலாம் என எச்சரிக்கை
  மணியடிக்கும் கவிதை வரிகள்.

  அருமை நண்பரே.

  பதிலளிநீக்கு
 2. நன்றி மகேந்திரன் அவர்களே. தங்களின் மேலான மதிப்புரைகள் எமக்கு சிறப்பாக அமைவதால்
  எனது அடுத்த கவிதை நூலில் தங்களின் விமரிசனங்களை வெளியிட விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. இந்த பிறவிக்கடலில்
  எப்போதாவது சந்திக்கும்
  வாழ்க்கைப் படகின்
  வெற்றிப் பயணத்தில்
  உன்னுடன் பயணிக்கின்றன...
  தோல்வியின் துடுப்புகளும்!
  நிஜத்தை சொல்லும் வரிகள் .

  பதிலளிநீக்கு