கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், நவம்பர் 29, 2011

விழுதுகளோடு வாழத்தான் வேண்டும் !

காலம் எப்போதும் சக்கரமாய்
சுழன்றுகொண்டுதான் இருக்கிறது
என்பதெல்லாம் பொய்!
காலம் வேகமாக
கடந்துகொண்டிருக்கிறது
என்பதுதான் உண்மை!
பரிணாம வளர்ச்சி
இபோதெல்லாம் பண்பாட்டின்
முதுகெலும்பில் என்றாகிவிட்டது!
கலாச்சாரம் என்றால் என்ன?
இந்த கேள்விகள் ...........
இளையதலைமுறைகளின்
பிரதானமானது !
இயற்கையின் இருப்பிடங்களும்
இயல்புநிலை மாறி
சரித்திரச் சான்றுகளை
சீரழிக்கின்றன.....!
பருவ காலங்களின் மாற்றங்கள்
தலைகீழாக பயணிக்கின்றன!
மனிதநேயத்தின் அறிச்சுவடுகளை
தேடித் தேடி பாதம்தான் தேய்கிறது!
இன்சொல் விலகி கடும்பொருள்
வன்சொற்கள் சிம்மாசனத்தில்!
எப்படியோ....நாமெல்லாம்.....
விழுதுகளோடு வாழத்தான்
விதிக்கப்பட்டுள்ளோம்!

...............கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், நவம்பர் 23, 2011

எப்போது கிடைக்கும்?பயணிக்கும்போது ஆன்மாவின்
இருப்பிடம் தூய்மையாகிறது!
அன்பை வெளிப்படுத்தி
அமைதியின் பிறப்பிடம் நோக்கி
பழகிய காலங்கள்
இன்பக் கேணியாய்
நெஞ்சில் பிரவாகமாகிறது!
துன்பத்தை பிறரிடம்
பகிர்ந்துகொள்ளும் போது
ஆறுதலான வரைபடம்
மனதில் உருவாகிறது!
எண்ணத்தூரிகைகளே .........
உங்களுக்கு ஒரு
சரியான ஓவியன்
எப்போது வருவான்?
என்னிடம் அலைபாயும்
எண்ணங்களின் வண்ணங்கள்
உள்ளக் கிண்ணங்களில்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன....
வீணாகிப்போனாலும் பரவாயில்லை !
ஒரு நல்ல ஓவியம்
எப்போது கிடைக்கும்?

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், நவம்பர் 22, 2011

பண்ணிசைக்கிறேன்!

உன்னில் இருந்து உதிர்ந்தாலும்
பரவாயில்லை....
சிறகை விரித்து பறக்கின்றாய் !
வானம் வசப்படட்டும்
நான் இந்த கரங்களில்
இருந்துகொண்டு
பண்ணிசைக்கிறேன்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.