கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், நவம்பர் 07, 2012

உறவுகளின் பண்பாடு - ஹைக்கூ*ஒரு இரவின் கைப்பிடிக்குள்
தப்பிக்கவே  பதுங்கியிருந்தது
பகலின் ஒளிப்பிம்பங்கள்


*கரைகளை அணைத்தபடி
நதி ஓடிக்கொண்டிருந்தது
இது கரைகளின் கனவு 


*கல்லுக்குள் ஈரம் இருப்பதால் 
சிற்பியின்  உளி விளைவிக்கிறது
எழில்மிகு சிற்பங்கள்


*இருந்தும்  இறந்தபடி
வாழ்கிறார்கள்
செலவிடாத  செல்வத்துடன்


*பாசத்தின் நிழலோடு
எப்போதும் பயணிக்கும்
உறவுகளின் பண்பாடு


                            .....கா .ந.கல்யாணசுந்தரம்