கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், டிசம்பர் 14, 2011

ஹைக்கூ சிந்தனைகள்....

















*தவமாய் தவமிருக்கும்
கூட்டுப்புழுவின் காத்திருப்பு....
ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு!

*ஒரு தலைமுறைக்கான இடைவெளியில்
தொலைத்ததை மீண்டும் தேடுகிறது....
புன்னகை மறந்த மானுடம்!

*பயணிக்கும் திசையில் மட்டுமில்லாமல்
வாழ்நாள் முழுவதும் வேண்டும் ...
ஒளிமயமான பசுமைக்காலம் !

*பிரிந்தபோதுதான் தெரிந்தது
இன்பம் மட்டுமே அல்ல....
வாழ்க்கையின் புரிதல் !

*இந்த பூமியைக் காட்டி
குழந்தைக்கு சோறு ஊட்டினாள்...
நிலவில் தாய்!

*விளையாடும் வயதை மறந்து
வயிற்றுப் பிழைப்பில் ...
பொம்மை விற்கும் சிறுமி!

*ஒரு பனிபொழியும் காலை
மேகப் போர்வைக்குள் ...
முடங்கிப்போனது சூரியக் கதிர்கள்!

*இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

5 கருத்துகள்:

  1. இந்த பூமியைக் காட்டி
    குழந்தைக்கு சோறு ஊட்டினாள்...
    நிலவில் தாய்!


    அருமை..


    மிகவும் இரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  2. ////*ஒரு தலைமுறைக்கான இடைவெளியில்
    தொலைத்ததை மீண்டும் தேடுகிறது....
    புன்னகை மறந்த மானுடம்!////



    சபாஷ் போட வைக்கும் கவிதை நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. முனைவர் இரா.குணசீலன் மற்றும் மகேந்திரன் அவர்களுக்கு நன்றி.
    சமுதாயப் பார்வையில் ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் எப்போதுமே நமக்கெல்லாம் ஒரு அலாதியான விருப்பம். அதன் வெளிப்பாடுதான்
    இந்த கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. Thank U much Abirami for your esteemed comments.
    Kalyanasundaram.

    abi sundari abikalyan2002@yahoo.co.in
    Dec 15 (2 days ago)
    to me


    Fantastic! When i was studying these lines really i felt ,these all are very very small things or incident happenning in everyone's life. But while studying ur lines i am thinking ,oh! this also we can write it as kavithai.Everywhere and in Everything kavithai is there but it depends on our eyes.

    with expectation of some more lines
    Abinathan

    பதிலளிநீக்கு