
@ என்னை புரட்டிப் பார்ப்பதைவிட
படித்துப்பாருங்கள்....
ஏங்கிடும் புத்தகங்கள்!
@ வீட்டின் அழகு கூட்ட
அலங்காரப் பொருளானேன்...
படிக்கப்படாத புத்தகங்கள் !
@ என்னுள் ஒரு மயிலிறகு
காலம் கடந்தும் சுமக்கிறது ...
வசந்த காலங்களை !
@ உங்களின் நினைவுகளில்
வாழாவிடினும் உணவானேன்...
கரையான்களுக்கு !
@ எப்படியோ அறிவொளி
ஏற்றி மகிழ்ந்தேன்
கிழிந்த நிலை புத்தகங்கள் !
.........கா.ந.கல்யாணசுந்தரம்.
படித்துப்பாருங்கள்....
ஏங்கிடும் புத்தகங்கள்!
@ வீட்டின் அழகு கூட்ட
அலங்காரப் பொருளானேன்...
படிக்கப்படாத புத்தகங்கள் !
@ என்னுள் ஒரு மயிலிறகு
காலம் கடந்தும் சுமக்கிறது ...
வசந்த காலங்களை !
@ உங்களின் நினைவுகளில்
வாழாவிடினும் உணவானேன்...
கரையான்களுக்கு !
@ எப்படியோ அறிவொளி
ஏற்றி மகிழ்ந்தேன்
கிழிந்த நிலை புத்தகங்கள் !
.........கா.ந.கல்யாணசுந்தரம்.