கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், பிப்ரவரி 24, 2014

ஏங்கிடும் புத்தகங்கள்!

 @ என்னை புரட்டிப் பார்ப்பதைவிட
 படித்துப்பாருங்கள்....
ஏங்கிடும் புத்தகங்கள்!

@ வீட்டின் அழகு கூட்ட
அலங்காரப் பொருளானேன்...
படிக்கப்படாத புத்தகங்கள் !

@ என்னுள் ஒரு மயிலிறகு
காலம் கடந்தும் சுமக்கிறது  ...
வசந்த காலங்களை !

@ உங்களின் நினைவுகளில்
வாழாவிடினும் உணவானேன்...
கரையான்களுக்கு !

@ எப்படியோ அறிவொளி
ஏற்றி மகிழ்ந்தேன்
கிழிந்த நிலை புத்தகங்கள் !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.


9 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீர்..
    தங்களது தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    http://blogintamil.blogspot.com/2014/03/blog-post_4.html

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு..
    வலைச்சரம் மூலம் வந்தேன்..
    புத்தகக் காதல் தொடரட்டும்..

    பதிலளிநீக்கு
  4. லே அவுட் சென்று ஆட காட்கட்இல் மீண்டும் ஒரு கூகுள் பிரன்ட் கனெக்ட் சேர்த்து பழையதை நீக்கவும்.
    தற்போதய நண்பர்களோடு புதிய "இந்தத் தளத்தில் இணைக" கிடைக்கும். நானும் சேர வழிபிறக்கும். இப்போது உள்ள காட்கட் சேர அனுமதிக்கவில்லை என்பதால் இந்தப் பதிவு...

    பதிலளிநீக்கு
  5. "என்னைப் புரட்டிப் பார்ப்பதை விட
    படித்துப்பாருங்கள்" என
    ஏங்கிடும் புத்தகங்களைப் பற்றி
    அழகாகச் சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  6. அழைப்பு

    மதிப்புக்குரிய அறிஞரே!

    http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

    மிக்க நன்றி

    இவ்வண்ணம்
    உங்கள் யாழ்பாவாணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அகராதியில் இன்று இணைந்துள்ளேன். நன்றி தங்களுக்கு.

      நீக்கு