கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, செப்டம்பர் 25, 2010

வெற்றியின் ரகசியங்கள்

வெற்றியின் ரகசியங்கள்

*சுயமுயற்சியால்
வெளியேற்றப்படும்...
தோல்விகளின் தோன்றல்கள்!

*வானில் பறக்கும் கழுகும்
உணவினை இழக்கிறது...
நேரமும் தூரமும் தவறானால்!

*சமத்துவப் பாதைகளை
தேர்ந்தெடுப்போம்...
வாழ்க்கை யாத்திரையில்!

*எப்போதும் முடியாது
நம்மால்...
இன்றே செயல்படாதபோது!

* ஒருபோதும் சந்தேகமில்லை
புதிய சமுதாயம் உருவாகும்...
சிந்தனைமிக்க மானுடம் வாழும் வரை!

*தற்காப்பு திறனையாவது
செயல்படுத்து...
வெற்றி வாய்ப்புகள் நழுவும்போது!

*தாழ்வு மனப்பான்மையை
எவராலும் உணர்த்தமுடியாது...
நம் அனுமதியின்றி!

*எப்போதும் வாழ்க்கைப் பாதையின்
படிக்கட்டுகளாய்...
இலக்குகள்!

........கா.ந.கல்யாணசுந்தரம்.