இசையுலகின் இணையிலா மேதை !
இறைவனின் இசை அவதாரம் !
இயற்கையின் இதயத்தை தொட்டவன் !
இயல்பின் வெளிப்பாடுகளில்
இமயத்தை முத்தமிட்டவன் !
இலங்கும் புவிமீது இசையின்
இலக்கணத்தை வடித்தவன் !
இன்றல்ல நேற்றல்ல என்றும்
இசையுலகின் சக்கரவர்த்தி !
இளையராஜா - எங்களின்
இதயம்கவர் கள்வன் !
இந்தியத்தாய் பெற்றெடுத்த
இணையிலா தவப்புதல்வன்
இன்னும் இன்னும் வேண்டும்
இவனின் இசை கேட்டு
இன்பம் பருகும் வாழ்நாட்கள் !
............கா.ந.கல்யாணசுந்தரம்.
வணக்கம் ஐயா !
பதிலளிநீக்குஇசைச் சக்கரவர்த்திக்கு ஓர் இனிமையான பாமாலை சூடி விட்டீர்கள் !
அருமை !அருமை !வாழ்த்துக்கள் மென்மேலும் தொடருங்கள் .
மிக்க நன்றி தங்களுக்கு. தங்களின் நலன் விசாரிப்பில் .....
நீக்குஅன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.