கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

இனி ஒரு விதி செய்வோம்.....
விடுதலைக்கான சின்னமாய்
இன்றும் பட்டொளிவீசி பறக்கிறது
நமது மூவண்ணக்கொடி!
அன்னியரின் அடிமத்தளையருத்து
பொன்னான தாயகத்தை
மீட்டெடுக்க இன்னுயிர் நீத்தனர்
இந்தியத் திருநாட்டின்
இணையில்லா தவப்புதல்வர்கள் !
நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்
நலமுற பேணிக் காப்போமென
உறுதிமொழி ஏற்றிடும்
மாணவ மாணவியர் தினம் தினம்!
ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாளில்
நல்லதொரு கருத்தினை
பகிர்ந்திடவே விழைகின்றேன்!
சுதந்திர தேசிய மணிக்கொடியை
இனி தனிமனித போராட்டத்தில்
பயன் படுத்தலாகாது!
கொள்கை எதுவாகிலும்
தேசிய கொடியினை தன்னலப்போக்கில்
தவறாகப் பயன்படுத்தி மக்களிடம்
அனுதாபம் பெறுகின்ற சுயநலவாதிகளை
அடையாளம் கண்டுகொள்வோம்!
அரசும் சட்டமும் இருந்தும்
அகற்றிட தயக்கமென்ன?
இனி ஒரு விதி செய்வோம் அதை
எந்தநாளும் காப்போம்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

6 கருத்துகள்:

 1. ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாளில்
  நல்லதொரு கருத்தினை
  பகிர்ந்திடவே விழைகின்றேன்!
  சுதந்திர தேசிய மணிக்கொடியை
  இனி தனிமனித போராட்டத்தில்
  பயன் படுத்தலாகாது!

  வாழ்த்துக்கள் சகோ உங்கள் எண்ணமும் நிறைவேற
  அருமையான புரட்சிக் கவிதைகள் தொடராடும்

  பதிலளிநீக்கு
 2. இனி ஒரு விதி செய்வோம்.....
  அதை எந்தநாளும் காப்போம் !

  இனிய சுதந்திரத்திருநாள் வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 3. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. தங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. சிறப்புக் கவிதை... அருமை சார்... நன்றி...


  ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளரட்டும்...
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

  பதிலளிநீக்கு
 5. தங்களின் மேலான கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு