கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், செப்டம்பர் 14, 2011

தேவை ஒரு மந்திரக்கோல்....


ஊழல், ஊழல், ஊழல்,
எங்கும் எதிலு ஊழல்....
கறுப்புப்பணம்.....இந்தியா
சுதந்திரம் வாங்கும் முன்பே
புழக்கத்தில் வழக்கமாகிப்போன
கணக்கில் வாராத பணம்.
உண்ணாவிரதம், சத்தியாகிரகம்
இவையெல்லாம் தேசத் தந்தை
மகாத்மாவினால் அடையாளம்
காணப்பட்டவை !
அரசுக்கு அறிவுறுத்தலாமே தவிர
மக்கள் வெள்ளத்தில்
வன்முறையை கட்டவிழ்க்கலாமா?
ஆம்..... இப்போது தேவை
நிச்சயம் தேவை ஒரு மந்திரக்கோல்....
ஒரு சமூக நீதி படைக்க!

3 கருத்துகள்:

  1. ///நிச்சயம் தேவை ஒரு மந்திரக்கோல்....
    ஒரு சமூக நீதி படைக்க!////

    ஆமாம், தாங்களே சொல்லிவிட்டீர்களே!
    அப்படி ஒரு மந்திரக் கோல் இருந்தால்
    தான் முடியும் போலிருக்கிறது.

    பாழும் சமூகம் பாரதியைப் போற்றும்
    பாரதிதாசனை ஏத்தும்,
    மகாத்மாவையே துதிக்கும்
    ஆனால், சாதி சாக்கடையிலே
    குளித்துக் களிக்கும்!

    சாதிகள் ஒழியும் வரை
    ஊழல் வாதிகளை காப்பாற்ற
    நாதிகள் வீதிதோறும் உண்டு...

    போராடப் பிறந்தவர்கள்
    போராடுவதை நிறுத்தலாகாது...
    பொல்லாத ஊழலை நெருப்பில்
    நீராட்டும் வரை போராட்டமும் ஓயாது..

    நன்றிகள் நண்பரே.
    http://tamizhvirumbi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. பாழும் சமூகம் பாரதியைப் போற்றும்
    பாரதிதாசனை ஏத்தும்,
    மகாத்மாவையே துதிக்கும்
    ஆனால், சாதி சாக்கடையிலே
    குளித்துக் களிக்கும்!

    சிறப்பாக சொன்னீர்கள் தமிழ்விரும்பி அவர்களே.
    உண்மையான சமுதாய மறுமலர்ச்சி என்பது மக்களிடமே ஒளிந்திருக்கிறது.
    அரசியல் ஆதாயம் இல்லாதவரை சமூகம் தெளிந்த நீரோடையாக இருக்கும்.
    .

    பதிலளிநீக்கு
  3. மறுமலர்ச்சி என்பது உணர்ச்சி வயபடாமல் ஆக்கபூர்வமான அளவுகோல்கலால்/மந்திரக்கோல்கலால் கையாளப்பட வேண்டிய ஒன்று. மிக நல்ல கருத்து. கவிஞரின் கனவு நனவாக இறையருள் கிட்டட்டும்.

    astuteabode.blogspot.com

    பதிலளிநீக்கு