கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், மார்ச் 02, 2009

நினைவலைகள்









வீட்டின் சன்னல் கதவுகளை
திறந்து வைத்து பார்க்கிறேன்...
மென்மையான வீசிக்கொண்டே இருக்கிறது!
தென்றலுக்குள் பொதின்திருக்கும்
நினைவலைகளில் என்னை நானே மறக்கிறேன்!
அப்போதுதான் மழை பெய்த ஈரம்,
வீட்டின் பரண் மீது இருந்த பழைய
அகல் விளக்குகளை தேடி எடுக்கிறேன்
மணல் மீது அகல்களால் இட்டிலிகளை
சுட்டு எடுக்கிறேன்...ஆம் அவை மணல் இட்டிலிகள்!
நண்பர்களை அழைக்கிறேன்....
வாருங்கள் சூடான இட்டிலிகள் சாப்பிடலாம்!
அவர்களும் மணல் இட்டிலிகளை சாப்பிடுவதுபோல்
பாவனை செய்தார்கள் ...ஆம்
கால நீரோட்டத்தில் மறைந்த என் அன்னையின்
நினைவலைகளில் மிதக்கிறேன்!
அம்மா இருந்தவரை எனக்கு தெரியவில்லை
பசியும் பட்டினியும்!







.............கா . ந. கல்யாணசுந்தரம்.























மனிதநேயத் துளிகள்





விட்டுக்கொடுக்கும்
பண்பை வளர்த்தன...
ஒற்றையடிப்பதைகள்!

........கா. ந. கல்யாணசுந்தரம்.