வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
உள்ளதாம் பொருள் வேதி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக உட்பொருள் ஆவாள்
மாதர் தீம்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழிலுடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிட பெற்றாள்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
வித்தைக்கு அரசியான அந்தக் கலைவாணி அருள் உங்கள் வாழ்விலும் மென்மேலும் சிறப்பைக் கொடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ .............நன்றி பகிர்வுக்கு ....
பதிலளிநீக்குகவிதை நன்று நண்பரே...
பதிலளிநீக்குநன்றி அம்பாள் அடியாள் அவர்களே.
பதிலளிநீக்கு