கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், அக்டோபர் 17, 2011

சற்று வித்தியாசமானதுதான்
















அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வனக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!

,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.

3 கருத்துகள்:

  1. புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
    அருமையான கவி.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாமார்ச் 18, 2013 12:00 PM

    punerndhu vaalum pullaverhalidam kattuppaar
    purindhu kondaal badhil solvan
    puriyavittaal thaly kunindhu salvaan.............

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாமார்ச் 18, 2013 12:03 PM

    unarndhu klondaal un maanem kaakkappadum
    unaravittal un maanam pokkishak karuvaryil irundhu neekkappadum...........

    பதிலளிநீக்கு