
ஒரு அங்கீகாரத்துக்காக
வாழ்நாளைப்
பணயம் வைத்ததுதான்
அவனின் கடந்தகாலம் .....
சறுக்கலின் கொடுமையை
உணர்ந்தவாறே
பயணித்தல்தான்
அவனது நிகழ்காலம் .....
எதோ ஒரு சக்த்தியால்
இயக்கப்படுகிறோம்....
நம்மால் ஒன்றும் இல்லை
இறையருள் ஒன்றே
மகத்தானது!
நல்லவை நடப்பது
நம்மிடம் இல்லை....
உழைத்த உழைப்பின்
அங்கீகாரம் அரூபமான
கடவுளிடம் இருந்து
கிடைத்துவிடும் ......
இதுவே அவனது
எதிர்காலத்தின்
வசந்தமானது!
.....கா.ந.கல்யாணசுந்தரம்.
கடவுள் கெர்டுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது...
பதிலளிநீக்குபலன்கள் கண்டிப்பாக வந்தடையும்...
உங்களின் வரிகளின் உள்ளடக்கத்தை
பதிலளிநீக்குநிகழ்நிலை வாழ்கையில் உணர்தவனில்
நானும் ஒருவன்
வரிகள் வாழ்கையின் யதார்த்தம்