கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, ஜூன் 08, 2012

சூட்சும நெறிகளை அறியவேண்டும்!




உணர்வுகள் மனித உடலின்
இரசாயனக் கலவை என்பதை
யாவரும் அறிந்ததே!
மனித இதயத்தின் இயக்கங்களை
மன அழுத்தம் கட்டுப்படுத்த இயலும்!
வெளியில் சொல்லப்படாத கவலைகள்
இரத்த நாளங்களை செயலிழக்கச் செய்யும்!
மொத்தத்தில் மனிதன் தனது
மூளையின் ஒழுங்கான செயல்பாட்டில்
இயங்கவிடாமல் வாழ்கிறான்!
செம்மையான சிந்தனைகளாலும்
அமைதி தியானம் போன்ற
அக ஒழுக்கங்களில்
வாழ்நாளை கூட்டவும் செய்யலாம் !
சிரிக்கத் தெரிந்த மனிதன்
வாழ்நாளில் புலம்பும் அவலநிலையை
சிரமேற் கொள்கிறான்!
சும்மா இருத்தலே சுகம் எனும்
ஞானியர் கூற்றில் ஒளிந்திருக்கும்
சூட்சும நெறிகளை அறியவேண்டும்!
மனிதம் வாழத்தான் பிறந்துள்ளது
என்பதை அறிய வேண்டும்!
வீடு பேற்றின் வாயிலைத் தொட
நாடு கடந்து போகத்தேவை இல்லை !
மனம் எனும் உள்ளக் கோயிலின்
மணிக் கதவுகளை சாந்தமெனும்
சாவி கொண்டு திறந்தாலே போதுமானது!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே. மிக்க நன்றி.

      நீக்கு
  2. மணிக் கதவுகளை சாந்தமெனும்
    சாவி கொண்டு திறந்தாலே போதுமானது!

    சூட்சும நெறிகளை அறியதந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜ இராஜேஸ்வரி அவர்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு எனது நன்றி.

      நீக்கு
  3. பெயரில்லாஜூலை 22, 2012 3:12 PM

    ''...மனம் எனும் உள்ளக் கோயிலின்
    மணிக் கதவுகளை சாந்தமெனும்
    சாவி கொண்டு திறந்தாலே போதுமானது!....
    உண்மையான கருத்து. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  4. இலங்காதிலகம் வேதா அவர்களே. தங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு