கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், செப்டம்பர் 17, 2012

மலர்களின் சிரிபொலி !


பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !

ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !

உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !

ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !

கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

3 கருத்துகள்:

  1. ரசிக்க வைக்கும் வரிகள்... காட்சிகள் கண் முன்னே தெரிகின்றன... நன்றி சார்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    கவிதை வாசல் கதவுகளைக்
    காதல் கொண்டு திறந்தனனே!
    புவியை மறந்து நிற்கின்றேன்!
    பூந்தேன் பருகிக் களிக்கின்றேன்
    செவியைக் குளிரச் செய்கின்ற
    சிறந்த உரையில் மகிழ்கின்றேன்!
    கவியை உயிரின் காற்றாகக்
    காக்கும் கா.ந வாழியவே!

    பதிலளிநீக்கு
  3. தங்களின் மேலான கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு