கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, நவம்பர் 16, 2012

'அனுபவம் என்பதே நான்தான்'







 
 
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
 
......................கவிஞர் கண்ணதாசன் 

6 கருத்துகள்:

  1. அருமை... உண்மை...

    பல தளங்களின் இதை கருத்தாக சொல்வதுண்டு... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அனுபவம்தான் ஆண்டவனெனில்
    அந்த அனுபவம்
    அல்லாவா, ஏசுவா, சிவனா

    அப்புறம் எந்த அனுபவத்திற்கு
    எந்த ஆண்டவன்

    பாவம் கண்ணதாசன்
    ஆண்டவன் சொன்னாரென்று
    இறந்து போய்விட்டார்

    ஆண்டவர் சொல்வாரா
    எழுந்து வாவென்று

    வந்தால் கேள்விக்கு விடை கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. இது சினிமா பாடல் இல்லை . அவரது நல்ல கவிதைகளில் ஒன்று
      தங்களின் கருத்துக்கு நன்றி.

      நீக்கு