கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஜூலை 17, 2012

நீர்க்குமிழி பயணத்தில்....

@ மன ஏரியில் முகிழ்த்து
அடிக்கடி உடைந்துபோகிறது
எண்ணக் குமிழ்கள்

@ மழை வெள்ளத்தில் மிதக்கும்
நீர்க்குமிழி பயணத்தில்....
நிலைத்திருக்கிறது மானுட வாழ்வு!

@ உடையும் மழை வெள்ள
நீர்க்குமிழி உடையும் போது....
உடன் அழுகிறது மழலை !

@ குளத்து நீரில் மிதக்கும்
தாமரை இலைகளின் வரவுகள்
ஒட்டாத நீர்த்துளிகள்!

@ காகித கப்பல்களின் பயணத்தில்
மழை நீர் ஓடைகள்...
நொறுங்கும் நீர்க் குமிழ்களோடு !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

3 கருத்துகள்:

 1. சிந்திக்க வைக்கும் வரிகள்...
  அவ்வளவு தான் வாழ்க்கையே...

  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

  என் தளத்தில் :
  "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

  பதிலளிநீக்கு
 2. எந்தக் காலத்திலும் நிலையாமை பற்றிய கவிதைகள் மனதை கவர்வதாக அமைகின்றன. அதுபோல இக்கவிதையும் மனதை ஈர்த்தது.

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாஜூலை 22, 2012 3:16 PM

  நிலையற்ற குமிழி.
  நிலையற்ந வாழ்வின் ஒப்பீடு நன்று. நல்வாழ்த்து.
  வேதா. இலஙங்காதிலகம்.

  பதிலளிநீக்கு