தமிழிசை நாள்தோறும் பாடு - இனி
நற்றமிழ் துறைதோறும் நாடு
இதுவன்றோ
தமிழனின் வீடு - இதை
மறுப்போரை மறக்காமல் சாடு
......(தமிழிசை )
தாய்மொழி நன்கறிந்து பயின்றால் - அயல்
மொழி இனிதாகும் இன்றே
வாய்மொழி தாய்தந்த பரிசு - நம்
வாழ்வினை வளமாக்கும் உறவு
....(தமிழிசை )
அம்மா என்றழைக்கும் மழலை - பின்
மம்மி
என்றழைப்பது ஏனோ ?
தனிமனித முன்னேற்றம் இதுவில்லை - ஏன்
தமிழன் மறந்தான்
நற்றமிழ் சொல்லை ?
......(தமிழிசை )
............................கா.ந.கல்யாணசுந்தரம் .
//..ஏன் தமிழன் மறந்தான் நற்றமிழ் சொல்லை ?..//
பதிலளிநீக்குபோலி நாகரிகத்தால் - மதி மயங்கி!..
இனியதொரு கவிதையினை வழங்கியமைக்கு மகிழ்ச்சி!..
மிக்க நன்றி துரை செல்வராஜ் அவர்களே.
பதிலளிநீக்குஅன்பின் இனிய புத்தாண்டு
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள்!..