கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், செப்டம்பர் 25, 2014

இன்னொரு பட்டாம்பூச்சி ....

ஒரு கோப்பை தேனீர்
என்னெதிரே இருக்க
பட்டம்பூச்சி என்னருகே
நலம் விசாரித்துவிட்டு
போகிறது....!

தேநீரை அருந்தாத
எனது நெஞ்சத்தில்
இனம்புரியாத
மகிழ்வோன்று
படபடக்கிறது....

இயற்கையுடன்
இணைந்த  வாழ்வில்
இயந்திரமாய்
இருப்பதற்கு
இடம் கொடுக்கவில்லை....!

எழுந்தவாறே
பறக்க நினைக்கிறேன் ....
நடப்பு நாளின்
நடுங்கும் குளிரிலும்
கங்குலானது மனது !

தீராத வேட்கைக்கு
தீர்ப்பெழுதிப்போன
அந்த வண்ணத்துப் பூச்சியின்
சிதைந்த சிறகு ஒன்று
கைகொட்டி சிரித்தது ...

இயற்கையுடன் இயைந்த
வாழ்வு கொடுவென்று
ஏளனமாய் எனைப்பார்த்து
வழிவிட்டு ஒதுங்கியது
காற்றின் தோழமையோடு !

மீண்டும் அமர்ந்தேன்
ஒரு கோப்பை தேநீரை
அருந்தியபடி
சிந்தித்துக் கொண்டிருந்தேன்...
நலம் விசாரிக்க வரவில்லை ...
இன்னொரு பட்டாம் பூச்சி !

...........கா.ந.கல்யாணசுந்தரம்
2 கருத்துகள்:

manavai james சொன்னது…

அன்புள்ள அய்யா திரு.கல்யாண் சுந்தரம் அவர்களுக்கு,
வணக்கம்.
இயற்கையுடன்
இணைந்த வாழ்வில்
இயந்திரமாய்
இருப்பதற்கு
இடம் கொடுக்கவில்லை....!


மீண்டும் அமர்ந்தேன்
ஒரு கோப்பை தேநீரை
அருந்தியபடி
சிந்தித்துக் கொண்டிருந்தேன்...
நலம் விசாரிக்க வரவில்லை ...
இன்னொரு பட்டாம் பூச்சி !

இயற்கைக் கவிதையில் கானாமல் போகமல் கண்டு கொள்ளப்பட்டீர்கள். நன்றாக இருக்கிறது கவிதை திரு.கா.நா.க. அவர்களே...வாழ்த்துகள்.
எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.inKaa.Na.Kalyanasundaram சொன்னது…

நன்றி மணவை ஜேம்ஸ் .