கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஆகஸ்ட் 31, 2016

மனம்கொத்திப் பறவைகளின் கூடாகட்டும் !

இருளின் அடர்த்திக்குள்
என்னை முழுவதுமாய்
திணித்துக்கொண்டேன் ...
வெளிச்ச நாட்களின்
வாழ்க்கைப் பக்கங்களை
விளக்கின்றி
படிக்கத் துவங்கினேன்....
திடீரென இருளை
அணைத்துக்கொண்டு
விளக்கொளி உள்ளே
பாய்ந்தது ....
வெளிச்சப் பூக்களை
அள்ளித்தெளித்த
தேவதையாய் இரவின்
கரங்கள் மகிழ்ந்தன...
பகலைவிட இருளை
அதிகம் நேசிக்கிறேன்
காரணம்.....
அப்போதுதான் நெஞ்சம்
மனதின் விசும்பல்களை
அசைபோட்டபடியே
நிம்மதியடைகிறது !
இரவின் கரங்களே....
இப்போதாவது
தெரிந்து கொள்ளுங்கள்
உங்களிடம் இருக்கும்
வெளிச்சஅரும்புகளை
பூக்கவிடாது என்மீது
இருளின் வேர்களை
படரவிடுங்கள்....
அவை எனது
மனம்கொத்திப் பறவைகளின்
கூடாகட்டும் !
.......கா.ந.கல்யாணசுந்தரம்

2 கருத்துகள்:

  1. 'இருளை
    அணைத்துக்கொண்டு
    விளக்கொளி உள்ளே
    பாய்ந்தது ....' - ரசித்தேன்.
    ஏதோ ஒரு சோக-சுகம் தெரிகிறதே?
    இதுதான்நஸ்தால்ஜியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனவெளி மத்தாப்புகளை தாங்கள் புரிந்துகொண்டீர்கள். நன்றி தங்களுக்கு. உங்களது பட்டிமன்ற பேச்சு மிகச் சிறப்பு. இனிய வாழ்த்துக்கள் என்றும் அன்பரே.

      நீக்கு