கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, செப்டம்பர் 24, 2011

புரிதலைத் தேடியது


காதலின்போது காட்டிய
பரிவும் அன்பின் அரவணைப்புகளும்
திருமண வாழ்வுதனில்
புரிதல் இல்லாது போனதென்ன?
உண்மைக் காதலென
இந்த உள்ளம் நம்பியதெல்லாம்
பொய்மையென காலம்
கற்பித்ததென்ன?
காதலுக்கும் காமத்திற்கும்
அர்த்தம் புரியாது
புரிதலைத் தேடியது....
இந்தப் பேதையின் குற்றமே!

......கா.ந.கல்யாணசுந்தரம்

2 கருத்துகள்:

  1. //இந்த உள்ளம் நம்பியதெல்லாம்
    பொய்மையென காலம்
    கற்பித்ததென்ன?//

    வாழ்வின் ஒரு நிலையில் நாம் தெரிந்துகொள்ளும் தத்துவம் தான் இது.
    கவிதை நல்லா இருக்கு நண்பரே.

    பதிலளிநீக்கு