பிறர்க்கு உதவி இன்பம் காணும்
சிறு பிள்ளைவயதை நினைத்தே,
வாழ்ந்த இவளின் பருவம்
சமுதாய வீதியில் - சில கயவர்கள்
மடியில் தஞ்சும் புகுந்தது...
பட்டாம்பூச்சியாய் சிறகடித்து
பறந்த காலங்கள் வெறும்
கூட்டுப் புழுவானாள்!
கால் வயிற்று கஞ்சிக்கு காலம் தள்ள....
வயிற்றில் விளைந்த கருக்களும்
தரிசுநில வித்தாகிப் போனது!
ஒப்பிலா இன்பமுதை இரவுக் கூடலில்
தந்தவளின் உடலின்று முடங்கியது!
நுகர்ந்தோர் எல்லாம் நகர்ந்து போயினர்
அந்த நடை பாதை நுனியை யாரும் நாடவில்லை
அள்ளியெடுத்து முத்தமிட்ட மேனிக்கு
இன்று கொள்ளிவைத்து
பால் வார்க்க யாருமில்லை!
சமுதாயம் பெற்ற சந்தனப் பேழை
சாக்கடைப் பொருளாய் சிதறிக் கிடக்கிறது!
பட்டமரக் கிளை மீதமர்ந்த கழுகுக்கு
பிணவிருந்தாகி மடிந்து போனாள்!
அந்தோ!...... சமுதாயம் பெற்ற
விலைமகளிர் எல்லாம்
இளவேனிர்காலத்து உதிர்ந்த
சருகுகளே!
......கா.ந.கல்யாணசுந்தரம்.
விலை மகளின்
பதிலளிநீக்குவாழ்கையை சொல்கிறது
சமூக வீதில்
உதிர்ந்து கிடக்கும்
சருகுகள்
மனிதம்
சிந்திக்கவேண்டிய சமூகக் கவி
ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி செயதாலி அவர்களே. உங்களின் பின்னூட்டங்கள் சிறப்பு.
பதிலளிநீக்கு// அந்தோ!...... சமுதாயம் பெற்ற
பதிலளிநீக்குவிலைமகளிர் எல்லாம்
இளவேனிர்காலத்து உதிர்ந்த
சருகுகளே!//
மனதை உலுக்கும் வரிகள் இவை சகோ!
கவிதை ஆக்கமும் கருத்து ஆக்கமும் மிகமிக
நன்று!
முதல் ஓட்டு
புலவர் சா இராமாநுசம்
நன்றி புலவர் ஐய்யா அவர்களே. உங்களின் பாராட்டுகள் எமது கவிதைக்கு பெருமை சேர்த்தன.
பதிலளிநீக்குWonderful and meaningful lines !! I love them !!!
பதிலளிநீக்கு