கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, டிசம்பர் 03, 2011

உனக்கான எனது காத்திருப்பு.....















நம்மைச் சுற்றி உற்றுநோக்கினால்

எல்லாமே எதற்காகவோ

காத்திருக்கின்றன...

முற்றுப்பெறாத நீண்ட சாலைகள்

பயணிப்பின் வரவை எதிர்நோக்கி!

விதைக்கப்பட்டவை

அறுவடை நாளை நோக்கி!

உயர்ந்த மலை முகடுகள்

நீர்வீழ்ச்சியின் வரவுக்காக!

வான் மேகங்கள்

நல்ல மழை பொழிதலுக்காக!

தேன்கூட்டின் ஈக்களும்

தேனருந்த முழுநிலவின் வருகைக்காக!

மூங்கில் காடுகள்

எப்போதும் காத்திருக்கின்றன

நல்லதொரு

புல்லாங்குழலை பிரசவிக்க !

இப்படி எத்தனையோ

அசையும் அசையா

பொருட்கள் ஒரு காத்திருப்பின்

சுகத்தில் லயித்திருக்கின்றன!

உனக்கான எனது காத்திருப்பு மட்டும்

உனக்கு கசந்துவிட்டது ஏனோ ?


............கா.ந.கல்யாணசுந்தரம்.

1 கருத்து:

  1. வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன். இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். அருமையான கருத்துகளை கவிதைகளாக உருவாக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். பகிர்விற்கு நன்றி நண்பரே!
    தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."


    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    பதிலளிநீக்கு