கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, டிசம்பர் 09, 2011

பின்னுக்கு தள்ளப்படவேண்டும் ....















எனக்கு தெரிந்தவரை மனிதம்
பின்னுக்குத் தள்ளப்படவேண்டும்...
பத்துபைசா தபால் அட்டையில்
நலம் விசாரித்தபோது உறவுகள்
பலமாயிருந்தது!
செல்போன் இல்லாத கரங்கள்
எப்போதும் தயாராய் இருந்தது
மற்றவர்களின் துன்பம் போக்க!
ஏர் பூட்டி உழவு மேற்கொண்டபோது
உணவுதானியங்கள் தரமாயிருந்தது!
நடைபாதை பயணங்கள்
மக்களின் நலனுக்கான வழிதந்தது!
திரைப்படங்கள் பண்பாட்டின்
சிகரங்களாய் விளங்கின!
இல்லறமே நல்லறமாய் கொண்டு
மாந்தரெல்லாம்
நல்லதொரு குடும்பம் பல்கலையென
வித்திட்டிருந்தன......
ஆம்...ஒரு குறைந்தபட்ச
மனிதநேயத்தைக் காண
எனக்கு தெரிந்தவரை மனிதம்
பின்னுக்குத் தள்ளப்படவேண்டும்...

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

6 கருத்துகள்:

  1. செல்போன் இல்லாத கரங்கள்
    எப்போதும் தயாராய் இருந்தது
    மற்றவர்களின் துன்பம் போக்க!//
    இன்று செல் போனில் பேசவே இருபத்திநாலு மணி நேரம் போதவில்லை. மற்றவர்களுக்கு உதவுவது எங்கே!

    பதிலளிநீக்கு
  2. செல்போன் பைத்தியங்கள் அதிகம் இந்தியாவில்

    பதிலளிநீக்கு
  3. Humanity is required for the mankind today.This is creating a thinking to help everybody, one who read this. Loving
    P.Kirubanandan, Hosur

    பதிலளிநீக்கு
  4. abi sundari abikalyan2002@yahoo.co.in
    8:57 PM (11 hours ago)
    to me


    This is really a good thinking to maintain atlest basic humanity in our liife. But in this
    fsat going robo world, no one have a time to think about, what they are getting from others
    or what they are giving to others in this soceity.So, definetly these words will make this soceity to think atleast for a second in their robo life.

    Thank you for your good comments.
    N.Kalyanasundaram

    பதிலளிநீக்கு
  5. rufina rajkumar சொன்னது…
    செல்போன் இல்லாத கரங்கள்
    எப்போதும் தயாராய் இருந்தது
    மற்றவர்களின் துன்பம் போக்க!//
    இன்று செல் போனில் பேசவே இருபத்திநாலு மணி நேரம் போதவில்லை. மற்றவர்களுக்கு உதவுவது எங்கே!

    ௯ டிசம்பர், ௨௦௧௧ ௬:௩௧ முற்பகல்

    தங்களுடைய மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கோவை எம் தங்கவேல் சொன்னது…
    செல்போன் பைத்தியங்கள் அதிகம் இந்தியாவில்


    நன்றி திரு.கோவை தங்கவேல்

    பதிலளிநீக்கு