கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

தாய்மையின் விளக்கம் உன்னிடமே!ஒளிதரும் மெழுகின் உன்னதமே-எங்கள்
பாச உணர்வின் உறைவிடமே!
அறுசுவை உணவின் பிறப்பிடமே-நல்ல
தாய்மையின் விளக்கம் உன்னிடமே!

கருவை சுமந்த நாள் முதலே-உன்
உருவம் காண துடித்திருந்தேன்!
பனிக்குடம் உடைத்து பிறப்பித்தாய்-நல்ல
தாய்மொழி அறிய கற்பித்தாய்!


நெஞ்சில் பதிந்த கல்வெட்டு - உந்தன்
நேசம் பொதிந்த தாலாட்டு!
இறைவனை நினைத்துப் பார்த்ததில்லை -உன்
இணையடி நிகர்க்கு ஏதுமில்லை!

[i] .....கா.ந.கல்யாணசுந்தரம்.[/i]