திங்கள், மே 21, 2012
ஹைக்கூ ... தத்துவ மலர்கள்
@ பரந்த மனம் இல்லையெனில்
எப்போதும் இதயம் சுமக்க நேரிடும்
அந்தரங்க அமைதியின்மை !
@ நோக்கமும் கொள்கையும்
செயல்திறனுடன் இணைந்தால் தெரியும்....
முன்னேற்றப் பாதையின் முதல்படி !
@ மன ஏரியில் முகிழ்த்து
அடிக்கடி உடைந்துபோகிறது...
எண்ணக் குமிழ்கள் !
@ உறவுகளின் நல்வாழ்வில்
பங்குபெறும் உதவிக்கரங்கள் ...
இறைவனின் வழிபாட்டுக்கு உகந்தது!
@ தவறான சிந்தனைகளை களைய
எப்போதும் தேவைப்படுகிறது...
மற்றுமொரு கற்பனை எண்ணம் !
@ உன்னை அறிதலால்
புனிதமாகிறது....
தன்னம்பிக்கையின் பிறப்பிடம் !
@ அதர்ம களைகளை அகற்றி
தர்மத்தின் வேர்களுக்கு நீர் ஊற்று....
மலரும் மனிதநேய மலர்கள்!
.............கா.ந.கல்யாணசுந்தரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தத்துவ துளிப்பாக்கள்
பதிலளிநீக்குசொல்லிச்செல்லுகிறது
வாழ்கையை
அருமை கவிஞரே
நன்றி செய்தாளி அவர்களே. தாங்கள் நலமா?
நீக்குநீண்டநாட்களுக்கு பிறகு தங்களின் பின்னூட்டத்தால்
மனம் மகிழ்கிறது.
தத்துவ ஹைக்கூ மிகவும் அருமை ஐயா/கவிஞரே
பதிலளிநீக்குஉன்மைத் துளிகள்...
பதிலளிநீக்கு