கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

எது சுதந்திரம்?















அன்னியரின் அடிமைத்தளையருத்து
ஆருயிர் தாயகத்தை மீட்டெடுத்து
இணையிலா இந்தியத்திருனாட்டின்
ஈடில்லா அரசியலமைப்பை
உருவாக்கி மகிழ்ந்தோம்!
ஊரும் நாடும் சிறப்புறவே
எளியவரும் பயனுறும் வண்ணம்
ஏற்றமிகு மக்களாட்சி மலர்ந்திடச் செய்தோம்!
ஐயம் இல்லா அறிவுத்திருக்கோயில்
ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்கினோம்!
ஓதும் கல்விமுறையில் மட்டும்
ஒளடதமாய் விளங்காமல்
மொழியுலக வரலாற்றில் சுதந்திரத்தை
பறிகொடுத்து வளர்கல்வி
அரசியலாய் சமைந்ததுவே!

.....கா.ந..கல்யாணசுந்தரம்

4 கருத்துகள்:

  1. யோசிக்க வைக்கும் வரிகள் சார்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. ஓதும் கல்விமுறையில் மட்டும்
    ஒளடதமாய் விளங்காமல்
    மொழியுலக வரலாற்றில் சுதந்திரத்தை
    பறிகொடுத்து வளர்கல்வி
    அரசியலாய் சமைந்ததுவே!

    கல்வி முறையும் சுதந்திரமாய் தளையிலிருந்து விடுதலை பெறட்டும்..

    பதிலளிநீக்கு