மழலை மொழியறியாது
மகிழ்வோடு பழகின...
பொம்மைகள் !
மழலைகளின்
கையசைப்பில்
மண்டிக்கிடந்தது....
மனிதநேயம்!
இறைவனின்
பங்களிப்பாய்
இல்லங்களில் மலர்ந்திருந்தது
மழலை மொழி !
நடைவண்டிக்கு
தெரிந்திருந்தது....
குழந்தை வளர்ப்பு!
ஒரு மரப்பாச்சியின்
முதல்
கனவு...
மழலைக்கு தாயானது!
........கா.ந.கல்யாணசுந்தரம்.
அருமையான கவிதை ....தொடரட்டும்
பதிலளிநீக்குநன்றி அருள் .
பதிலளிநீக்கு