தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய
முகநூல் குழுமங்கள் - தொடர்ச்சி
***********************************************************************
முகநூல் குழுமங்கள் - தொடர்ச்சி
***********************************************************************
21.08.2018 எனது பதிவின் பின்னூட்டங்களில் எமக்கு பலர் பாராட்டியும் இந்தப் பதிவு தக்க நேரத்தில் பதியப்பட்ட சிறப்பு என்றும் தெரிவித்துள்ளனர். சிலர் குறிப்பாக Venkatesan Ramalingam, VathilaiPraba, வெற்றிப்பேரொளி, முனைவர் ம.ரமேஷ்மற்றும் இராம.வேல்முருகன் வலங்கைமான் ஆகியோர் பின்னூட்டங்களுக்கு பதில் கூறவேண்டிய நிலையிலும் மேலும் குழுமங்கள் தம்மைச் செழுமைப் படுத்திக்கொள்ளவும் இந்தப் பதிவு அத்தியாவசியப்படுகிறது.
* தமிழகத்தில் பல்வேறு பதிவுபெற்ற பேரவைகள்,சங்கங்கள்,இலக்கிய அமைப்புகள் ,சிற்றிதழ் அமைப்புகள் கவிஞர்களுக்கு
கவிமாமணி,கவிமணி,கவிச்சுடர், கவிக்கோ ,ஒட்டக்கூத்தர்,நக்கீரன்,ஒளவையார்,கம்பர்,கபிலர்,திருவள்ளுவர்,பாரதி,பாரதிதாசன் போன்ற விருதுகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் மூத்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அரசு விருதுகளும் இப்படியே.
கவிமாமணி,கவிமணி,கவிச்சுடர், கவிக்கோ ,ஒட்டக்கூத்தர்,நக்கீரன்,ஒளவையார்,கம்பர்,கபிலர்,திருவள்ளுவர்,பாரதி,பாரதிதாசன் போன்ற விருதுகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் மூத்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அரசு விருதுகளும் இப்படியே.
* கடந்த மூன்று ஆண்டுகளாக முகநூல் குழுமங்கள் பல்வேறு வகையான விருதுகளையும், மேற்கண்ட பெயருடைய விருதுகளையும், சான்றுகளையும் வழங்கி வருகின்றன. இதில் தகுதியுடைய சிலரும்,ஒன்றிரண்டு கவிதைகள் எழுதிய புதியவர்கள் பலரும் அடங்குவர்.
* மாவட்ட அளவில் மட்டைப்பந்து போட்டியிலும் பன்னாட்டளவில் நடைபெறும் போட்டிகளிலும் (கிரிக்கெட்) Man Of The Match கொடுக்கப்படுவதிலும் வேறுபாடு உண்டு. ஆனால் மாவட்ட அளவில் பெரும் விருதுதான் அந்த வீரரை பன்னாட்டு அளவில் போட்டிகளில் பங்கேற்க உதவுகிறது/ஊக்கமூட்டுகிறது என்பதில் ஐயமில்லை.
இதுபோலவே அங்கீகாரம் பெற்ற சிறந்த இலக்கிய அமைப்புகள் கொடுக்கும் விருதுகளை எளிமையாய் முகநூல் குழுமங்கள் பலருக்கும் கொடுப்பது ஊக்கப்படுத்தவே என உணரவேண்டும். தமது பெயருக்கு முன்னால் விருது பெயர்களை சேர்த்துக்கொள்ள தமக்கு அந்தத் தகுதி உள்ளதா என கவிஞர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதே விருதுகளை அங்கீகாரம் பெற்ற இலக்கிய அமைப்புகளிடம் பெற முயற்சி செய்ய வேண்டும்
* ஆண்டுவிழா நடத்த அன்பளிப்பு பெறுவதில் தவறில்லை. ஆனால் அன்பளிப்பு கொடுத்தால்தான் சான்றிதழ்கள், விருதுகள் எனும் நிலை மாறவேண்டும். குழுமங்கள் சில மட்டுமே இலக்கியத் தொடர்புடைய, சிறந்த தமிழ்ப்பணியாற்றும் கவிஞர்களுக்கு விருதுகள் தருகின்றன. பல அமைப்புகள் மாற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
* முகநூல் குழுமங்கள் கவிதை போட்டிகளைக் குறைத்துக்கொண்டு பயிற்றுவித்தலில் ஈடுபட வேண்டும். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில குழுமங்கள் பயிற்றுவித்தலில் முனைப்புடன் ஈடுபட்டு வருவது சிறப்பு.
* ஆண்டு முழுக்க முகநூல் குழுமங்களில் போட்டியில் பங்குபெறுவதோடு தமிழ் இலக்கியச் சுவை ததும்பும் முன்னோர்களின் கவிதைகளை ஆய்வு செய்து கட்டுரைகள் வழங்குதல் சிறப்பு.
* முகநூல் குழுமங்களில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் புதிய குழுமங்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி உருவாக்கினாலும் தனிப்பட்ட பாதிப்புகளுக்கு பொதுவெளியில் குழும உறுப்பினர்களை அவமதிப்பதை தவிர்க்க வேண்டும்.
* முகநூல் குழுமங்கள் போட்டி போட்டுக்கொண்டு விருதுகளை அள்ளித் தருவதை தவிர்க்கலாம். ஆண்டுமுழுக்க தமிழ்ப்பணியாற்றும் தேர்ந்த கவிஞர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் கொடுத்து சிறப்பிக்கலாம்.
* முகநூல் குழுமங்கள் தங்களது சான்றுகளில் நிறுவனர் / தலைவர், செயலர் மற்றும் சிறப்பு விருந்தினர் கையொப்பமிட்ட சான்றுகளை வழங்குதல் வேண்டும். சிறப்புடையதுமாகும்.
* குழுமங்கள் இனிவரும் காலங்களில் கவியரங்க அமர்வுகளை குறைத்து சிறப்பான திட்டமிடலை கையாளவேண்டும். ஐந்து நூல்களுக்குமேல் மேடையில் வெளியிடுவதை தவிர்த்தல் நல்லது.
விருது வழங்கல் நிகழ்வை நேரத்தோடு துவங்குதல் குழுமத்துக்கு ஆரோக்கியமானது.
விருது வழங்கல் நிகழ்வை நேரத்தோடு துவங்குதல் குழுமத்துக்கு ஆரோக்கியமானது.
* குழும விழாக்கள் தமிழ்ப் பண்ணோடு தொடங்கி நாட்டுப்பண்ணோடு முடித்தல் அவசியம் எனக் கருத வேண்டும்.
* நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நீண்ட நேரம் பேசி மற்றவர்கள் நேரத்தை எடுத்துக்கொள்வதை தவிர்த்தல் நன்று.
* நீண்ட தொலைவில் இருந்து வரும் கவிஞர்கள், வெளியூர் கவிஞர்கள் என முன்னதாக வரிசைப்படுத்தி , மேடையில் விருதுகளை சிறப்பாக அவசரமின்றி அளிக்கலாம். கவிஞர் வெற்றிப்பேரொளி சொன்னதுபோல் கிளைமாக்ஸ் காட்சிகளை தவிர்க்கலாம்.
இவையாவும்...எமக்குத் தோன்றிய கருத்துகள். முகநூல் குழுமங்கள் தம்மைச் செழுமைப் படுத்தி தமிழ்ப்பணி ஆற்றுங்கள். விருதுகள்/சான்றுகள் தேர்ந்த கவிஞர்களுக்கும் சான்றோர்களுக்கும் தொடர்ந்து வழங்குங்கள்.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக